சனி, 31 ஆகஸ்ட், 2013

ஆஹா என்ன ருசி!# ‘’தமிழ் சினிமா கிளப்’’ சேனலில் தமிழ் திரைப்படங்களை ஒளிபரப்பும் போது அத்திரைப்படத்தின் பெயரை வலது பக்க மேல் மூலையில் காண்பிக்கிறார்கள். அதனால் எந்த நேரத்தில் அந்தச் சேனலைப் பார்த்தாலும் அபோது என்ன திரைப்படம் ஓடிக்கொண்டிருக்கிறது என்று தெரிந்து கொள்ள வசதியாக இருக்கிறது.  மற்ற சேனல்களிலும் இது போல ஒளிபரப்பப்படும் திரைப்படத்தின் பெயரைக் காண்பித்தால் பார்ப்பவர்களுக்கு மிகவும் வசதியாக இருக்குமே – செய்வார்களா?!


 # சன்தொலைக்காட்சியில் ‘’ஆஹா என்ன ருசி’’ என்ற சமையல் நிகழ்ச்சியை ஒளிபர்ப்பி வருகிறார்கள், அந்நிகழ்ச்சியை செஃப் ஜேக்கப் தயாரித்து வந்தார். அவர் இறந்து சில மாதங்களாகி விட்டன. அவர் இறந்த பிறகும் அந்நிகழ்ச்சி தொடர்ந்து ஒளிபர்ப்பாகி வருகிறது. ஜேக்கப் சமைக்கும் சில காட்சிகளும் அதில் இடம் பெறுகின்றன. ஒருவர் இறந்த பிறகும் நிகழ்ச்சி தொடர்ந்து ஒளிபரப்பாவது ஆச்சர்யமாக உள்ளது.(அவ்வளவு காட்சிகள் தயார் செய்து வைத்துள்ளாரா?)

#சிறுவர் சிறுமிகளுக்கான சன் சிங்கர்ஸ் நிகழ்ச்சியில் சிறுமி ரேணுகா ‘’மல்லிகை முல்லை மலர்ப்பந்தல் பச்சை வாழை தோரணங்கள் எல்லாம் எதுக்காக?’’’ என்ற பாடலைப் பாட ஆரம்பித்தார்.உடனே கங்கை அமரன் அனுராதா ரமணன் புஷ்பவனம் குப்புசாமி மூவரும் அந்தப் பெண்ணின் அருகே சென்று பாடலை நிறுத்தச் சொல்லி சரியா இல்லையே உனக்கு ‘’கம்ஃபர்டபிலா இருக்கா?’ ’என்று கேட்டுக் கொண்டிருந்தார்கள். இப்ப பாடவேண்டிய பாடலே வேறே ஹேப்பி பர்த்டே இல்லே பாடணும் என்று சொல்லி கேக் வெட்டி பாடிய சிறுமிக்கு பர்த் டே கொண்டாடினார்கள். அதை முடித்து அப்பாடலைப் பாடச் சொன்னார்கள்.  பாட்டைப் பாடியதில் குறை ஏதுமில்லாமல் பாடலை இடைமறித்து இப்படி பயமுறுத்தி பர்த் டே கொண்டாட வேண்டுமா?  அச்சிறுமி பாட வந்ததுமே பிறந்த நாள் கொண்டாடிவிட்டு பிறகு பாடச் சொல்லி இருக்கலாமே!  இந்த நாடகம் அந்த மேடையில். தேவைதானா?

6 கருத்துகள்:

 1. இறந்த பிறகும் நடிப்பது தமிழில் மட்டுமே சாத்தியம்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உண்fமைதான். தங்கள் வருகைக்கும் கருத்துப் பதிவிற்கும் நன்றி.

   நீக்கு
 2. ஹா..ஹா..ஹா.. நியாயமான கேள்விகள்தான்ன்... ஆனா நமக்கு தவறாக தெரியும் ஒரு விஷயம் சில வேளைகளில் அடுத்தவருக்கு சரியாக தெரிகிறது..

  கண்ணதாசன் அவர்கள் எழுதிய ஒரு பாடலும், அவர் இறந்த பின்பே படம் எடுக்கப்பட்டதாக அறிந்தேன்ன்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. athira1 September 2013 05:06 said
   // நமக்கு தவறாக தெரியும் ஒரு விஷயம் சில வேளைகளில் அடுத்தவருக்கு சரியாக தெரிகிறது..//

   நீங்கள் சொல்வது உண்மைதான்.
   தங்கள் வருகைக்கும் பதிவிற்கும் நன்றி

   நீக்கு
 3. அவர் அனுராதா ரமணன் அல்ல... அனுராத ஸ்ரீராம்....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. Priya25 September 2013 21:27
   //அவர் அனுராதா ரமணன் அல்ல... அனுராத ஸ்ரீராம்.//
   தங்கள் வருகைக்கும் கருத்துப் பதிவிற்கும் நன்றி. தவறைச் சுட்டிக்காட்டியமைக்கு சிறப்பு நன்றி.

   நீக்கு

தங்கள் மேலான கருத்துக்களை தெரிவிக்கவும்.