#தினந்தோறும் திருக்குறள் விளக்கம் வழங்கிக்
கொண்டிருந்த சாலமன் பாப்பையா அவர்களின் அமுதமொழிகள் நிகழ்ச்சியை ஞாயிறு காலை
மட்டும்தான் கேட்கமுடியும் என்ற நிலையை உண்டாக்கிவிட்டார்கள்- சரி அன்றாவது பழைய
இலக்கியங்களை கேட்கலாமே என்று தொடர்ந்து அந்நிகழ்ச்சியைப் பார்க்கலாம் என்றால்
ஒளிபரப்பிய அதே பகுதியை திரும்பத் திரும்ப ஒளிபர்ப்பிக்கொண்டிருக்கிறார்கள்
நாய்வாலை அளந்து நறுக்கி தீட்டினாலும
எழுத்தாணியாக ஆகாது,. சுடுகாட்டை பெருக்கி விளக்கேற்றினாலும் வீடாகாது. அது போல
தாய் பேச்சைக் கேட்காத சண்டியன் கஞ்சனாக ஈவாரை ஈயஒட்டான், தானும் தரமாட்டான். என்ற
விவேக சிந்தாமணியின் கருத்துக்களையும் இதே போல பல ஓளிபர்ப்பிய பகுதிகளையும்
திரும்பத் திரும்ப ஒளிபரப்புவது நியாயமா? இவர்களைக் கேட்க யாருமே இல்லை என்ற
தைரியத்தில்தானே இப்படி செய்கிறார்கள்.
#கார்த்திகைப் பெண்கள் தொடர் முடிந்தது. கதையின்
முடிவில் வழக்கம் போல வில்லன் திருந்துவதாகக் காட்டினார்கள். (வில்லன்
ஜெயிலுக்கும் போய் ஜெயிலில் இருந்தபோது திருந்தினார் என்று சொன்னால்கூட
பராவாயில்லை) வில்லனின் மகள் ஆர்த்தியை காதலித்து திருமணம் செய்து கொண்டான் என்ற
காரணத்திற்காக அவனை கொன்றுவிட்டதற்காக வருந்தி அவனது பெற்றோரை ஜெயிலுக்கு
வரவழைத்து அவர்களிடம் தன் மகள் ஆர்த்தியை மகளாக அவர்களிடம் ஒப்படைப்பதும் தன் ரைஸ்
மில்லை அவர்களுக்கு எழுதி வைப்பதும் நம்பும்படியாக இல்லையே.,
# ஸ்நிக்கர்ஸ் விளம்பர்த்தில் இப்போது 100%
வெஜிடேரியன் என்று போடுகிறார்களே அப்படியென்றால் இதுவரை மழுவதும் வெஜிடேரியன்
இல்லையா? அப்படியென்றால் அதை அறிவிக்காதது ஏன்?
# ‘’பாலுசாமி என்னை பொடியன்னு கூப்பிடறான்’’
என்று சொல்லும் சிறுவனுக்கு ‘’ஒரு காதில வாங்கி இன்னொரு காதிலே விட்டுறு’’ என்று
டாக்டர் ஆலோசனை சொல்வதும் அதற்கு சிறுவன் ‘’கஷ்டம் ஏன்னா நான் இரண்டு காதிலேயும்
கேட்கிறேனே!’’ என்று சொல்வதும் சுவையான விளம்பரம். ஆனால் இப்பொழுது அப்பகுதியை
மட்டும் வெட்டிவிட்டு ஒளிபரப்புகிறார்களே! விளம்பர நேரத்தைக் குறைக்க இப்படி
செய்தார்களோ?
# சன் டீவியிலும் ஒளிபரப்பிய அதே சில படங்களை
திரும்பத் திரும்ப ஒளிபரப்பிக் கொண்டிருக்கிறார்கள். ஒளிபரப்ப வேறு படங்களே
கிடைக்கவில்லையா இவர்களுக்கு? இந்தியத் தொலைக்காட்சி வரலாற்றில் முதல் முறையாக இப்படம்
நூறாவது முறையாக ஒளிபரப்பப்படுகிறது என்று அறிவிப்பார்களோ!
தொ(ல்)லைகாட்சி எல்லாம் காணுவீர்களா....?
பதிலளிநீக்குதிரும்ப திரும்ப ஒளிபரப்பும்போது எரிச்சல்தான் வரும்.
பதிலளிநீக்குஉங்களுக்கு தெரியுமா? முட்டை சேர்க்காத சொக்கலேட்டுகள் இல்லையாம்.
நாம் அனைவரும் உதட்டுக்கு பூசும் லிப்ஸ்ரிக் தயாரிக்க பயன்படும் பொருட்களில் ஒன்று மீச் செதில்களாம்ம்.. இதை எல்லாம் வெளியே சொல்கிறார்களா? எத்தனை பேருக்கு தெரியும்?.. எல்லாம் பிஸ்னஸ்மயமாகிவிட்டது.
அது மீன் செதில்கள்.. எழுத்துப் பிழை வந்துவிட்டது.
நீக்குathira25 August 2013 08:05
நீக்கு//திரும்ப திரும்ப ஒளிபரப்பும்போது எரிச்சல்தான் வரும்.
உங்களுக்கு தெரியுமா? முட்டை சேர்க்காத சொக்கலேட்டுகள் இல்லையாம்//
தங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி. கேக்குகள் தான் அப்படி செய்வார்கள் என்று கேள்விப் பட்டிருக்கிறேன். சாக்கலேட்டுகளும் அப்படித்தானா?? எல்லாம் எத்தனை பேருக்கு தெரியும்?.. நன்றி
திண்டுக்கல் தனபாலன்25 August 2013 07:13
பதிலளிநீக்கு//தொ(ல்)லைகாட்சி எல்லாம் காணுவீர்களா...//.
தங்கள் வருகைக்கும் பதிவிற்கும் நன்றி
தனியாக இருக்கும் போது சீரியலில் வரும் பாத்திரங்கள்தானே நமக்குத் துணை?!
தொலைக் காட்சிப் பார்ப்பதெற்கெல்லாம் நேரம் இருக்கின்றதா?
பதிலளிநீக்குகரந்தை ஜெயக்குமார்25 August 2013 17:13
பதிலளிநீக்கு//தொலைக் காட்சிப் பார்ப்பதெற்கெல்லாம் நேரம் இருக்கின்றதா?//
தங்கள் வருகைக்கும் கருத்திட்டமைக்கும் நன்றி.
(டீவி ஓடிக்கொண்டிருக்கும் இடையே போக வர பார்ப்பதுதான்)