முந்தானை முடிச்சு
தொடரில் மீனா ஒருவனை காதலித்து கல்யாணத்திற்கு முன்பே கர்ப்பமாகிவிடுகிறாள்.
திருமதி செல்வம் தொடரில் கதாநாயகி அர்ச்சனாவின் தங்கை ப்ரியா கல்யாணத்திற்கு
முன்பே கர்ப்பமாகி குழந்தை பெற்றுக்கொண்டதாகக் கதையை அமைத்திருந்தார்கள்.
‘’செல்லமே’ தொடரில்
ஒரு பெண்ணை நான்கு பேர் கெடுத்துவிட அவள் கல்யாணத்திற்கு முன்பே கர்ப்பமானதாகவும்
அவர்களுள் கர்ப்பத்திற்குக் காரணமானவனையே கல்யாணம் செய்து கொள்கிறாள்.என்றும் கதை
தொடர்ந்தது.
உதிரிப்பூக்கள்
தொடரில் திருமணமான தெட்சிணாமூர்த்தி இன்னொருத்தி யுடன் கல்யாணம் செய்து கொள்ளாமலே
குழந்தையும் பெற்று குடும்பம் நடத்துவதாகக் கதையை அமைத்திருக்கிறார்கள்.
இவையெல்லாம்
போதாதென்று சமீபத்தில் துவங்கிய ‘பிள்ளை நிலா’’ தொடரிலும் கோகிலா காதலித்து
கல்யாணத்திற்கு முன்னதாகவே கர்ப்பமாகி இருப்பதாகக் கதையைத் துவக்கியிருக்கிறார்கள்.
ஆக சன்
தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தொடர்களில் பாதி தொடர்களில் இப்படி
கல்யாணத்திற்கு முன்பாகவே கர்ப்பமாகிவிடுவதாகக் கதையை அமைத்திருக்கிறார்களே தொடர்
தயாரிப்பாளர்கள். இவர்கள் மக்களுக்குச் சொல்வதுதான் என்ன??
வர வர , திருப்பங்களை கொண்டு வர, சீரியல்கள் எந்த கோணமானாலும் பரவாயில்லை என்று, நினைப்பதாக தோன்றுகிறது.டி.ஆர்.பி. தானே முக்கியம். பார்ப்பவர்கள் எக்கேடு கெட்டால் யாருக்கு கவலை?
பதிலளிநீக்குஎன் புதிய பதிவை பார்த்து உங்கள் கருத்தை சொல்ல வேண்டுகிறேன்.(முடிந்தால்)
http://vetrimagal.blogspot.in/2012/05/blog-post.html
நன்றி.
Vetrimagal said
பதிலளிநீக்கு//டி.ஆர்.பி. தானே முக்கியம். பார்ப்பவர்கள் எக்கேடு கெட்டால் யாருக்கு கவலை?//
மிகச்சரியாகச் சொல்லியிருக்கிறீர்கள். தொடரை நீட்டிக்க என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்று நினைப்பதாகவே தோன்றுகிறது