‘திருமதி செல்வம்’ தொடரில் ஒரு நல்லவனை குடிக்க வைத்து அவனுக்கு கெட்ட பெயர் வரவைத்து விட்டார்கள் தொடரின் தயாரிப்பாளர்கள். அவனது மனைவி தற்கொலை செய்து கொள்ள முயல அதனால் மனம் மாறிய செல்வம் இனி குடிக்க மாட்டேன் என்று சத்தியம் செய்கிறானாம்.
அவன் குண்டர்களால் தாக்கப்பட்டு கைஎழும்பு முறிந்து போகிறது. அந்த வலி தெரியாமல் இருக்க நாட்டு வைத்தியர் சிறிது குடிக்க வைக்கிறாராம். அதனால் வலி வரும் போதெல்லாம் குடிக்கிறானாம். அப்படி குடிக்கும் போது மனைவிக்குத் தெரியக் கூடாது என்று நந்தினி வீட்டில் தங்குவானாம் கதையை நகர்த்துவதற்காக எப்படி வேண்டுமானாலும் யோசிப்பதா?
வலி வருகிற ஒவ்வொருவரும் குடித்துக் கொண்டுதான் இருக்கிறார்களா? வலியைப் போக்க குடிப்பதைத் தவிர வேறு வழியே இல்லையா? கையில் வலி இருந்தால் பணக்கார செல்வம் ஒரு மருத்துவரை கலந்தாலோசிக்க மாட்டாரா?!! குடித்துவிட்டு தனக்கு பல விதத்திலும் உதவி செய்த நந்தினிக்கு கஷ்டம் வருவதுபோல ஒரு செயலை ஆரம்பத்திலிருந்து நல்லவனாக சித்தரிக்கப்பட்ட செல்வம் செய்வானா?
‘தொடர்களை எப்படித்தான் பார்க்கிறீர்களோ?’ என்று பலர் கேட்பதைப் பார்த்திருக்கிறேன். அப்படிப்பட்ட தொடர்களில் இதையெல்லாம் யோசிப்பது தவறுதானோ!!
நல்ல பகிர்வு.வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குஸாதிகா said...
பதிலளிநீக்கு''நல்ல பகிர்வு.வாழ்த்துக்கள்''
தங்கள் வருகைக்கும் பதிவுக்கும் நன்றி
Yosikanum than nanbare . Ippatithan pengal serial pakarangalo
பதிலளிநீக்குகார்த்தி கேயனி said...
பதிலளிநீக்கு//Yosikanum than nanbare . Ippatithan pengal serial pakarangal//
உங்கள் வருகைக்கும் பதிவிற்கும் நன்றி. கிட்டதட்ட எல்லா தொடர்களிலும் ஏதாவது ஒரு பாத்திரம் குடிப்பதுபோல காட்டுவது ஒரு வியாதியாகவே பரவி வருகிறது.
ஏதாவது காரணம் வைத்து குடிப்பதை நியாயப் படுத்துவது தப்பு.
பதிலளிநீக்குகல்லூரி, பள்ளி மாணவர்கள் பீர் குடிக்கிறார்கள். ஆபீஸ் விழா என்றால் பீர் குடிப்பதையும், மது குடிப்பதையும் காட்டுகிறார்கள்.
கோமதி அரசு said...
பதிலளிநீக்கு'ஏதாவது காரணம் வைத்து குடிப்பதை நியாயப் படுத்துவது தப்பு'
மிகச்சரியாக சொல்லியிருக்கிறீர்கள். ஆனால் இந்த சீரியல் தயாரிப்பாளர்கள் இதையேதான் திரும்பத்திரும்ப செய்கிறார்கள். உங்கள் வருகைக்கும் பதிவிற்கும் நன்றி