வியாழன், 29 செப்டம்பர், 2011

தொலைக்காட்சி தொடர் இயக்குனர்கள் இப்படியா பூச்சுற்றுவது?


‘தென்றல்’ தொலைக்காட்சி தொடரில் கதாநாயகன் தமிழுக்கு சாருவுடன் திருமணம் நிச்சயமானாலும் சூழ்நிலை காரணமாக தமிழுக்கு துளசியுடன் திருமணம் நடந்துவிடுகிறது.  தமிழின் அம்மா அவர்களை ஏற்றுக் கொள்வதோ ஏற்காததோ  வேறு விஷயம்.  ஆனால் தமிழின் அம்மாவோ தொடர்ந்து சாருவுடன் பேசுகிறாராம், ‘ உன்னை எப்படியாவது தமிழுக்கு கல்யாணம் செய்து வைக்கிறேன்’ என்று உறுதி தருகிறாராம். அதனால் அவர் துளசியை எதற்கெடுத்தாலும் திட்டுகிறாரம். கதையில் விறுவிறுப்பு ட்விஸ்ட் வேண்டும் என்பதற்காக எப்படி வேண்டுமானாலும் யோசிக்கலாமா?
தொடர்களில்  மாமியார் மருமகள் சண்டை இருக்க வேண்டும்      அப்போது தான் தொடரில் விறுவிறுப்பு குறையாது என்ற எண்ணத்திலோ என்னவோ மருமகள் செய்வதையெல்லாம் குறை சொல்வது போன்ற மாமியார் பாத்திரங்களை ‘மாதவி’, ‘செல்வி’, ‘தென்றல்’ போன்ற தொடர்களில் புகுத்தி இருக்கிறார்களோ!  மாமியார்கள் எப்படியெல்லாம் குறை கண்டுபிடிக்கலாம் என்றோ மருமகள்கள் எப்படியெல்லாம் எதிர்த்து பேசலாம் என்றோ  சொல்லிக் கொடுப்பது போல ஆகிவிடக்கூடாது என்பதை தொடர் தயாரிப்பாளர்கள் நினைவில் வைத்துக்கொள்ளட்டும்.
மாதவி தொடரில் மாதவியும் மனோகரனும் காதலிக்கிறார்கள். சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக மனோகரனுக்கும் அருணாவிற்கும் கல்யாணம் நடக்கிறது. ஆனால்  மனோகரன் மாதவியையே நினைத்துக் கொண்டிருப்பதாகக்  காரணம் காட்டி அருணா விவாகரத்து வாங்கு கிறாராம், அருணாவிடமிருந்து விவாகரத்து ஆன பிறகு மாதவி மனோகரனை கல்யாணம் செய்து கொள்ளப் போகும் போது அருணா மனோகரனை இன்னமும் காதலிப்பதாகவும் அதனால் மாதவி மனோகரனை திருமணம் செய்யக்கூடாது என தடுக்கப் போகிறார். அப்போது மணமேடை வரை வந்த மாதவி “அதுவரை தான் நாடகம் ஆடியதாக”ச் சொல்லி அருணா மனோகரனைக் கல்யாணம் செய்து கொள்ளட்டும் என்று சொல்கிறார். அப்படியே கல்யாணமும் நடக்கிறது. இது ஒரு மெகாத் தொடர் என்பதற்காக கதையை  எப்படி வேண்டுமானாலும் மாற்றி மாற்றி பார்ப்பவர்கள் காதில பூச்சுற்றுவது நியாயமா?
 

7 கருத்துகள்:

 1. சி.பி.செந்தில்குமார் said...

  // தொடர் விமர்சனம்????//

  இது தொடர் விமர்சனம் அல்ல. தொடரும் (தொலைக் காட்சி)விமர்சனம். வருகைக்கும் பதிவிற்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 2. நானும் இன்றுதான் உங்க பக்கம் வரேன். தொலைக்காட்சி சீரியல் எல்லாமே இந்த அழகில்தானே இருக்கு. பாக்கப்போனா ஜனங்க இதைத்தான் விரும்புராங்கன்னுவேர சப்பைக்கட்டு. நாம தான் இதையெல்லாம் பார்ப்பதைத்தவிர்க்கனும்.

  பதிலளிநீக்கு
 3. Lakshmi said...

  " நானும் இன்றுதான் உங்க பக்கம் வரேன். தொலைக்காட்சி சீரியல் எல்லாமே இந்த அழகில்தானே இருக்கு"

  உங்கள் வருகைக்கும் பதிவிற்கும் நன்றி

  பதிலளிநீக்கு
 4. அது சரி, இவ்வளவு மோசமான நிகழ்ச்சிகளைப் பார்ப்பதைத் தவிர்த்துவிட்டு தூர்தர்ஷன் பொதிகையின் மற்ற நல்ல நிகழ்ச்சிகள், தூர்தர்ஷன் பாரதி, சங்கரா தொலைக்காட்சி, எஸ்விபிசி பக்தி சானலின் நாத நீராஜனம்போன்ற நிகழ்ச்சிகளைப்பார்க்கலாமே.

  என் பதிவுக்கு முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. எங்க ஊர்ப் பெருமாள் கோயிலைப் பற்றியும் எழுதி உள்ளேன், ஜூன் மாசம் கும்பாபிஷேஹம் நடத்தப்பட்டது. சுட்டி தரேன். பாருங்க. நன்றிங்க.

  பதிலளிநீக்கு
 5. geethasmbsvm6 said...

  ""அது சரி, இவ்வளவு மோசமான நிகழ்ச்சிகளைப் பார்ப்பதைத் தவிர்த்துவிட்டு.....""

  Thanks for your comments. We see those programs also. when we see such of these serials we have to record our views so that the directors may correct themseves

  பதிலளிநீக்கு
 6. சரிதான். ஆனாலும் பார்ப்பதைத் தவிர்த்தால் பார்வையாளர்கள் குறைந்தால் இவையும் குறையுமே. தொலைக்காட்சி சீரியல்களில் நடிப்பவர்கள் எல்லாம் கொஞ்சம் கூடச் சலிப்பில்லாமல் எப்படித்தான் இப்படி எல்லாம் நடிக்கிறாங்கனே புரியலை. கொஞ்சம் கூட யோசிக்க மாட்டாங்க போல

  பதிலளிநீக்கு

தங்கள் மேலான கருத்துக்களை தெரிவிக்கவும்.