ஞாயிறு, 26 பிப்ரவரி, 2017

அனாதைப் பிணங்களை அடக்கம் செய்யும் தொண்டு நிறுவனங்கள்

சன் தொலைக் காட்சியின் நிஜங்கள் தொடர் நிகழ்ச்சியில் வழக்கமான குடும்ப பிரச்சினைகள் இல்லாமல் வித்தியாசமாக சமூக அக்கரையோடு சிலரை அழைத்துப் பேசுவது பாராட்டத்தக்கது. அனாதைப் பிணங்களை அடக்கம் செய்பவர்களுடன் குஷ்பு பேசியது அவர்கள் சேவைக்கு ஒரு பாராட்டு தெரிவித்தது போன்று இருந்தது..
அதில் கலந்து கொண்ட கோவை ஜீவ சாந்தி ட்ரஸ்ட்டைச் சேர்ந்தவர்  கூறும்போது ‘’வாழும் போது எப்படி வாழ்கிறோம் என்பதை    விட இறந்தபிறகு பலரது உள்ளங்களில் வாழ்கிறோம் என்பதில் மகிழ்ச்சி கிடைக்கிறது’’ என்று குறிப்பிட்டது அவரது சேவை மனப் பாண்மையை தெரிவித்தது.  இறந்தவர் எந்த மதத்தைச் சேர்ந்தவரோ அவரது மத வழக்கப்படி உடலை அடக்கம் செய்வோம் என்று கூறினார். ஒவ்வொரு முறை அடக்கம் செய்யும் போதும் இதுவே இப்படி அனாதையாக வருவது கடைசியாக இருக்கட்டும் என்று வேண்டிக் கொள்வதாக குறிப்பிட்டார், ஒவ்வொருவரும் இறக்கும் போது அவர்களுடைய உறவினர்கள் அருகில் இருக்கும்படி பார்த்துக் கொள்ளக் கேட்டுக் கொண்டார்.

இதே போல ஒரு பெண்மணியும், ஒரு தம்பதியும் ட்ரஸ்ட் ஏற்படுத்தி இந்தப் பணியை செய்து கொண்டிருப்பதாக தெரிவித்தனர்.  மகத்தான இந்த தொண்டைச் செய்யும் இவர்களைப் பாராட்ட வார்த்தைகளே இல்லை.

இதே போல முடிந்தவரையில் ஏழைகளுக்கு குறைந்த விலையில் சாப்பாடு போடுபவரையும் பேட்டி கண்டார் குஷ்பு. அவரது சேவையைப் பார்த்து ஒரு ஆஸ்திரேலியா வாழ் தமிழர் அறுபதாயிரம் ரூபாய் பணம் தந்தாராம். அதை வாங்கிக் கொள்ள மறுத்துவிட்டாராம். ஏழை மாணவர்களுக்கு பேனா புத்தகம் வாங்கித் தர ஐந்நூறு ரூபாய் மட்டும் வாங்கிக் கொண்டாராம். சமைத்த உணவை தேவையானவர்களுக்கு கொண்டு சேர்க்கும் வாட்ஸ் அப் க்ரூப்பை நடத்தும் பெண்ணை பேட்டிகண்டார்.  அனைவரும் பாராட்டுக்குரியவர்களே


இந்த நிகழ்ச்சியை பத்து நிமிடங்கள் முன்னதாகவே முடித்துவிடுவதைப் பற்றி குறிப்பிட்டு எழுதி இருந்தேன். இப்போது சில தினங்களாக இந்நிகழ்ச்சியை சரியான நேரத்திற்கு முடிக்கிறார்கள் என்பது குறிப்பிடத் தக்கது. இது தற்செயலாக நடந்திருந்தாலும் பாராட்டுக்குரியது.

2 கருத்துகள்:

  1. நானும் இந்த ஷோ பார்த்தேன், மிகவும் நெஞ்சை உருக்குவதாக இருந்தது, சூசைட் பண்ணுபவர்களை விட, கீழே இறங்கி அந்த உடல்களை எடுத்து வருபவரை நினைக்க மிகவும் கஸ்டமாக இருக்கிறது, ஆனா இப்போ அரசாங்கம் அதுக்கு வேலி போட்டுள்ளமை வரவேற்கத்தக்கது, இதை ஆரம்பமே பண்ணி இருப்பின் பல உயிர்களைக் காப்பாற்றி இருக்கலாமோ என எண்ணத் தோணுது..:(.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி
      உங்கள் வருகைக்கும் கருத்துப் பதிவிற்கும் நன்றி
      நீங்கள் குறிப்பிட்டிருப்பது முற்றிலும் உண்மை. இதை ஆரம்பத்திலேயேபண்ணி இருந்தால் பல உயிர்களை காப்பாற்றி இருக்கலாம் என்றே தோன்றுகிறது

      நீக்கு

தங்கள் மேலான கருத்துக்களை தெரிவிக்கவும்.