வியாழன், 16 பிப்ரவரி, 2017

வழக்கு ஒரே நாளில் முடியுமா?


சன் டீவியில் ஒளிபரப்பாகும் சந்திரலேகா தொடரில் வசுந்தராவுக்கு எதிரான வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. வழக்கு தொடர்ந்த காவல்துறை அதிகாரி சித்தார்த் நீதிமன்றத்திற்கு வரமுடியாதபடி சதி செய்து வெளியூரில் அடைத்துவிடுகிறார்களாம்.
அவருக்குப் பதிலாக வேறு ஒரு ஆய்வாளர் அங்கு வருகிறாராம். ஆனால் அவர் ஏதும் பேசாமல் இருக்கும் போது வசுந்தராவிடம் நீதிபதி விளக்கம் கேட்க அவர் சந்திரா பற்றியும் சித்தார்த் பற்றியும் கற்பனைக் கதைகளை சொல்கிறார் அவரது வக்கீலும் பல புகைப்படங்களையும் வீடியோவையும் காண்பிக்க எடிட்டர் உண்மைநிலையை விளக்கிச் சொல்லியும்கூட அந்த நீதிபதி சித்தார்த்தின் வக்கீல் தரும் விளக்கத்தையும் ஏற்காமல் அவர்களுக்கு வாய்ப்பு ஏதும் தராமல் வசுந்தராமேல் குற்றம் இல்லை என்று சொல்லி அவரை விடுதலை செய்துவிடுகிறாராம்.  எந்த  ஊரில்இப்படி ஒரே நாளில் நிதிபதி தீர்ப்பு. வழங்குகிறார்.. எத்தனை வழக்குகள் வாய்தாவிலேயே போய்.க் கொண்டிருக்கும் போது  இப்படி ஒரு தீர்ப்பா?
நிஜங்கள் சீக்கிரமாக 1.18 க்கோ அல்லது 1.20 க்கோ முடிந்து விடுகிறது. இது முடிந்த உடனேயே 1.30 க்கு தொடங்க வேண்டிய அடுத்த தொடரான தாமரையை ஒளிபரப்பத் தொடஙகி விடுகிறார்கள்.. 1.30 க்கு டீவியை ஆன் செய்பவர்களால் அந்த தொடரை முழுவதுமாக பார்க்க முடியாமல் போய்விடுமே.  அதைப் பற்றியெல்லாம் அவர்களுக்கு என்ன கவலை?


சன் சிங்கர் இறுதிச்சுற்றின் நேரடி ஒளிபரப்பில் நட்சத்திரா கையில் வைத்திருக்கும் மைக் நன்றாக வேலை செய்தது. ஆனால் விருந்தினர்களிடம் கொடுத்த மைக் சரியாக வேலை செய்யவில்லை என்பதால் அவர்கள் பேசியதை கேட்கமுடியவில்லை. அந்த மைக் வேலை செய்யவில்லை என்பதை கடைசிவரை சன் டீவிக்காரர்களுக்குத் தெரியாமல் போனது எப்படி? அந்த பிரமாண்ட நிகழ்ச்சியில் இப்படி ஒரு தவறு ஏற்பட யார் காரணம்?

2 கருத்துகள்:

தங்கள் மேலான கருத்துக்களை தெரிவிக்கவும்.