ஞாயிறு, 22 நவம்பர், 2015
செவ்வாய், 23 ஜூன், 2015
தொடர்களையும் விட்டுவைக்காத பேய்கள்
சன்
தொலைகாட்lசியில் ஒளிபரப்பாகும் பாசமலர்ககள் தொடரில் முக்கிய வில்லி கார்விபத்தில் இறந்து
விடுகிறார். அவர் ஆவியாக மல்லிகாவின் உடலில்
புகுந்துகொண்டு தாமரை குடும்பத்தையே ஆட்டிவைக்கிறாராம். வம்சம் தொடரில் பூமிகா இறந்துவிட்டதாகவும்
அவர் ஆவியாக வந்து மதனையும், அவருடைய தாய்
வசந்தாவையும் பயமுறுத்துகிறாராம். ஆதிரா தொடரில்
இறந்து போன ஒரு பெண் பேயாகவந்து ஆதிராவுக்கு உதவுகிறாராம். இப்படி கதைக்கு சம்பந்தம் இருக்கிறதோ
இல்லையோ தொடர்களில் பேயைக் கொண்டுவந்துவிட்டார்கள்.
லேபிள்கள்:
தொடர் விமர்சனம்,
தொலைக் காட்சி,
பொது,
TV serials
திங்கள், 13 ஏப்ரல், 2015
இந்த தொடர் கலாச்சாரம்தான் தொடரும் கலாச்சாரமா ?
விவாகரத்து ஆகாமல் இன்னொருவரைத் திருமணம் செய்து கொள்வது தான் சன்
தொலைக்காட்சியின் தொடர் கலாச்சாரமா? என்ற தலைப்பில் சென்ற பதிவில் எழுதி
இருந்தேன்.இந்த தொடர் கலாச்சாரம் தொடரும் கலாச்சாரம் ஆகிக் கொண்டிருக்கிறது என்றே
தோன்றுகிறது மற்ற சில தொடர்களையும் பார்க்கும் போது.
லேபிள்கள்:
தொடர் விமர்சனம்,
தொலைக் காட்சி,
பொது
ஞாயிறு, 29 மார்ச், 2015
விவாகரத்து ஆகாமல் இன்னொருவரைத் திருமணம் செய்வதுதான் தொடர் கலாச்சாரமா?
சன்
தொலைக் காட்சியில் அமுத மொழிகள், இந்த நாள் இனிய நாள் போன்ற நிகழ்ச்சிகள் நிறுத்தப்
பட்டுவிட்டன என்று யார் சொன்னது? (சாரி நான் தான் எழுதினேனா?) இல்லை இல்லை அவை
இருக்கின்றன சன் தொலைக் காட்சியின் நிகழ்ச்சி நிரல்படி அதாவது 6.15 க்கு அமுத மொழிகள், 6.30 க்கு ராசிபலன். 6.45 க்கு இந்த நாள் இனிய நாள் என்று தான் 29.3.2015 ஞாயிறு காலை வரை காண்பித்துக்
கொண்டிருக்கிறார்கள். அப்படி என்றால் என்ன அர்த்தம் அந்த நிகழ்ச்சிகள் தற்காலிகமாக
ஒளிபரப்பப் படவில்லை என்றே தோன்றுகிறது. வருகிற வாரங்களிலாவது இவற்றை இடம்பெறச்
செய்வார்கள் என்று நம்புவோமா?
லேபிள்கள்:
தொடர் விமர்சனம்,
தொலைக் காட்சி,
TV serials
ஞாயிறு, 15 மார்ச், 2015
மாற்றம் வேண்டும் என்பதற்காகவே நல்லனவற்றைக் கூட மாற்றுவதா?
ஞாயிறன்று காலை
சன்
டீவியின் நிகழ்ச்சி நிரல்படி 6 மணிக்கு புத்தம் புதுசு, 6.15 க்கு அமுத
மொழிகள்,, 6.30க்கு ,ராசிபலன், 6.45க்கு
இந்த நாள் இனிய நாள் என்றுதான் இருந்தது. ஆனால் ஓளிபரப்பப்பட்டவை ஆலய வழிபாடு,
ஆலயவழிபாடு ராசிபலன் மட்டுமே. சாலமன் பாப்பையா வழங்கும் அமுதமொழிகளும், சுகிசிவம்
வழங்கும் இந்த நாள் இனியநாளும் காணாமல் போய்விட்டன. தினசரி திருக்குறள் மற்றும்
பழைய இலக்கிய விளக்கங்களையும், இந்த நாள் இனிய நாள் நிகழ்ச்சியையும் ஒளி பரப்பியது ஒரு காலம்
லேபிள்கள்:
தொலைக் காட்சி,
பொது,
TV serials
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)