புதன், 15 பிப்ரவரி, 2012

நல்லவன் குடிக்கமாட்டான்; அப்படி குடிப்பவன் நல்லவனாக மாட்டான்

“திருமதி செல்வம்” தொடரில் செல்வம் கதாபாத்திரத்தை மிக நல்லவராக உருவாக்கிவிட்டு அவர் சந்தர்ப்ப சூழ்நிலையால் குடிக்க ஆரம்பித்து பின் மொடா குடியனாக ஆகிவிட்டதாகவும், குடிகாரர்கள் செய்யும் எல்லா அட்டகாசங்களையும் செல்வம் செய்வதாகவும் காட்டி வருகிறார்கள். இது ஒத்துக்கொள்ளக்கூடியதாகவே இல்லை.

ஒரு நல்லவன் எத்தனை முறை எத்தனை பேரால் கட்டாயாப் படுத்தப் பட்டாலும்கூட அவன் குடிக்கமாட்டான். அப்படியே குடித்தால்கூட அடாவடித்தனமாக நடக்கமாட்டான் இது நிச்சயம். இப்படியெல்லாம் நடப்பவனை நல்லவன் என்று எப்படிச் சொல்லமுடியும்.

உங்கள் கதைக்கு சுவாரஸ்யம் கூட்டவேண்டும், எதிர்பாராத திருப்பங்கள் வர வேண்டும் என்பதற்காக இப்படியெல்லாம் இயற்கைக்கு மாறாகக் காட்டுவதா? நல்லவனே குடிப்பதாகக் காட்டுவதால் இன்னும் சிலபேர் குடிகாரர்களாக மாற வாய்ப்பு உள்ளது என்பதை மட்டும் மறந்துவிடாதீர்கள்.

பகல் நேரத்தில் ஒளிபரப்பான திருமதி செல்வம் அதன் கதை அமைப்பு நன்றாக இருந்ததால் இரவு நேர ஒளிபரப்பாக மாற்றப்பட்டது. செல்வத்தின் தம்பி, செல்வத்தின் அப்பா குடிகாரர்கள்தான்; அவர்கள் நல்லவர்களாகக் கட்டப்படவில்லை. செல்வம் நல்லவன், யாருக்கும் கெடுதல் செய்யாதவன், எல்லோருக்கும் நல்லதே செய்பவன், பல கஷ்டங்களுக்கிடையே முன்னேறி வருபவன் இப்படி மாறியதாகக் காட்டுவதை ஒத்துக் கொள்ளவே முடியாது.

5 கருத்துகள்:

  1. இத்தொடர் நான் பார்ப்பதில்லை, அதனால எதுவும் சொல்லத்தெரியவில்லை.

    பதிலளிநீக்கு
  2. தங்கள் வருகைக்கும் பதிவிற்கும் நன்றி

    பதிலளிநீக்கு
  3. வலைச்சரத்தில் என் வலைப்பூவை அறிமுகப்படுத்தி உள்ளமைக்கு நன்றி. உங்கள் ஊக்குவிப்புக்கு நன்றி

    6 March 2012 21:3

    பதிலளிநீக்கு

தங்கள் மேலான கருத்துக்களை தெரிவிக்கவும்.