ஞாயிறு, 15 ஜனவரி, 2012

பொங்கல் நல் வாழ்த்துக்கள்

கதாநாயகனே இறந்ததாகச் சொன்னால் யார்தான் நம்புவார்கள்?” என்று சில நாட்களுக்கு முன் எழுதியிருந்தேன். சில நாட்களிலேயே நாதஸ்வரம் தொடரின் கதாநாயகனும், கதாநாயகியும் கோடைக்கானல் மலையிலிருந்து விழுந்த்தாகக் காண்பித்தார்கள். இதை யார்தான் நம்புவார்கள்? எண்று அவர்களுக்கே தோன்றியிருக்க வேண்டும். முதலில் கதாநாயகன் உயிரோடு இருப்பது போல காண்பித்து ஒரு நாள் கழித்து கதாநாயகியும் காலில் அடிபட்டு பிழைத்துவிட்டதாகக் காண்பித்து விட்டார்கள்.

அதேபோல “முந்தானை முடிச்சு’” கதாநாயகி தமிழரசியும் இறந்துபோய் அவளது உடலை மார்ச்சுவரிக்கே கொண்டுபோய்விட்டதாகக் காண்பித்தார்கள். கதாநாயகி இறந்ததாகக் காட்டுவதை யாரும் நம்பமாட்டார்கள் என்பதை இப்போது நன்கு உணர்ந்து தமிழரசி உயிர் பிழைத்துவிட்டதாகக் காண்பித்து விட்டார்கள்.

இனி இது போன்ற காட்சிகளே தம் தொடர்களில் வராமல் டைரக்டர்கள் பார்த்துக் கொள்வார்கள் என்று நம்புவோமா?.

அனைவருக்கும் புத்தாண்டு மற்றும் பொங்கல்
நல் வாழ்த்துக்கள்

என் வலைப்பதிவை ஆரம்பித்து ஒருவருடத்துக்கு மேலாகியும் பலரது பார்வையில் படாமலே இருந்துவந்தது. சிலமாதங்கள் முன்பு தான் ஒரு நண்பர் மூலமாக வலைப்பதிவு திரட்டிகள் பற்றி கேள்விப் பட்டேன். அவற்றில் பதிவு செய்த சில மாதங்களிலேயே ஆயிரம் பேருக்குமேல் என் எழுத்துக்களைப் படித்திருக்கிறார்கள் என்பதை பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது.

வலைப்பதிவைப் படித்துச் செல்லும் சக பதிவர்களின் கருத்துக்களும், ஆலோசனைகளும் ஊக்குவிப்பும் என்னை மேலும் மேலும் எழுதத்தூண்டுகின்றன. என் எழுத்துக்களைப் படித்தவர்கள், பின்னூட்டமிட்டவர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி யை தெரிவித்துக்கொள்கிறேன். எப்பொழுதும் உங்கள் கருத்துக் களையும் ஆலோசனைகளையும் பெரிதும் மதிக்கிறேன்,

நன்றி நன்றி நன்றி

இப்படிக்கு
வியபதி, அவை நாயகன்

4 கருத்துகள்:

  1. இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  2. இராஜராஜேஸ்வரி said.. /"இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்"/


    நன்றி. உங்களுக்கும் பொங்கல் நல் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  3. இந்த நாடகம் பலபேர் சொல்லக் கேட்டிருக்கிறேன், இது சன் ரீவியில்தான் இளிபரப்பாகுதுபோல, எங்களிடம் சன் ரீவி இல்லை.

    பதிலளிநீக்கு
  4. தங்கள் வருகைக்கும் பதிவிற்கும் நன்றி

    பதிலளிநீக்கு

தங்கள் மேலான கருத்துக்களை தெரிவிக்கவும்.