வெள்ளி, 2 டிசம்பர், 2011

தொலைக்காட்சித் தொடரை நீட்டிக்க இப்படியும் ஒரு வழியா


நாதஸ்வரம் தொடரில் பாண்டியனையும் மகாவையும் காணவில்லை என்று தேடிக் கொண்டிருந்தார்கள். ஒரு வழியாக இருவரையும் கண்டுபிடித்து விட்டார்கள்.  முந்தானை முடிச்சு தொடரில் காதலன் எங்கோ வேலைதேடிப் போய்விட அவனது நண்பனும் காதலியும் படாத பாடுபடுகிற போதுகூட அவன் வரவில்லையாம்.

அழகி தொடரில் மதியையும் அவளது காதலனையும் காணோம் என்று தேடி நல்லவேளையாக சீக்கிரமே கண்டுபிடித்து விட்டதாகக் காண்பித்துவிட்டார்கள். செல்லமே தொடரில் வடமலையைக் காணோம் என்று தேடினார்கள். இப்போது கதாநாயகி செல்லம்மா மட்டும் தேடிக்கொண்டிருக்கிறார். (தொடரைப் பார்த்துக் கொண்டிருக்கும் ரசிகர்களுக்கு அவர் எங்கு இருக்கிறார் என்பது தெரியும்)
திருமதி செல்வம் தொடரில் செல்வத்தைக் காணவில்லை என்று தேடிக்கொண்டு இருக்கிறார்கள்.

பகல் நேர தொடரான இளவரசியில் இளவரசியின் கணவரைக் காணவில்லை என்று தேடுவதாகக் கதை செல்கிறது

ஒருவரைக் காணவில்லை  என்று தேடுவதும் அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்று போலீசும் மற்றவர்களும் அலைவதுமாக தொடரை நீட்டிக்க ஒரு வழி இருக்கும்  போது அவ்வழியை எந்த தொடரின் இயக்குனர்தான்  விட்டுவைப்பார். அதுதான் எல்லா தொடர்களிலும் தொடர்கிறது போல இருக்கிறது.

4 கருத்துகள்:

  1. Blogger நல்லதை தேடி said...
    " ஸலாம் நாடக வியாதியா ?"

    தங்கள் வருகைக்கும் பதிவிற்கும் நன்றி - ஆம் நாடக வியாதிபோல்தான் இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  2. எப்படி சார்.. இவ்வளவு பொறுமை உங்களுக்கு எங்கிருந்து வந்தது?

    (ஹீ...ஹீ... எல்லா நாடக கதைகளையும் சொல்கிறீர்களே, அவ்வளவு பொறுமையாக இருந்து பார்க்கிறீர்களே என்று தான்..)

    பதிலளிநீக்கு
  3. Blogger ஷர்மி said...
    "எப்படி சார்.. இவ்வளவு பொறுமை உங்களுக்கு எங்கிருந்து வந்தது"


    தங்களது வருகைக்கும், எழுதிய குறிப்பிற்கும் நன்றி.
    (சும்மா இருக்கிற நேரத்தில் பார்ப்பதும் விமர்சனம் எழுதுவதும் ஒரு பழக்கமாகப் போய்விட்டது)

    பதிலளிநீக்கு

தங்கள் மேலான கருத்துக்களை தெரிவிக்கவும்.