சனி, 22 அக்டோபர், 2016

நிகழ்ச்சியை நடத்தவிடாமல் செய்வதுதான் காமெடியா;?

காமெடி ஜங்சன்     

சன் தொலைக் காட்சியில் இரவு 10.30 ஸ்லாட்டை நிரப்புவதற்காக புதிதாக ஒரு நிகழ்ச்சி  அவசர கோலத்தில் ஆரம்பித்த நிகழ்ச்சிதான் காமெடி ஜங்சன். ஆரம்பத்தில் ஜெயச்சந்திரன் நிகழ்ச்சியை நடத்தினார். உதவிக்கு மதுரை முத்துவையும் ஆதவனையும் இணைத்தார்கள்.
எப்படி எப்படியோ நிகழ்ச்சியை நடத்தினார்கள் நடத்த உதவினார்கள் என்றும் சொல்லலாம்.


திறமை இருப்பவர்கள் வந்து கலந்து கொள்ளலாம் என்ற விளம்பரத்தைப் பார்த்து பலர் வந்தார்கள், வந்து கொண்டிருக்கிறார்கள். புதியவர்களாக இருந்தும் பலர் நன்றாகவே செய்கிறார்கள். ஆனால் இந்த மதுரை முத்துவும் ஆதவனும் அடிக்கிற லூட்டியில் அவர்கள் தங்களுடைய நகைச்சுவைகளைச் சொல்லமுடிவதில்லை அல்லது சொல்லவந்ததை முடிக்க முடிவதில்லை.

அவர்களுடைய அகராதியில் அழகி என்றால் எப்படி இருக்க வேண்டுமோ தெரியவில்லை. வருபவர்கள் அழகி என்று சொல்லி விட்டால் போதும் அவர்களைக் கலாய்க்காமல் விடுவதில்லை. வரும் எல்லா பெண்களையும் கலாய்ப்பதுதான் இவர்கள் வேலையாக இருக்கிறது. இவர்கள் கலாய்ப்பையும் மீறி சிலர் கஷ்டப்பட்டு தாங்கள் சொல்ல வந்ததை முடித்துவிட்டு செல்கிறார்கள்.


இவர்கள் நிகழ்ச்சியில் கலந்துகொள்பவர்களுக்கு உதவி செய்யவேண்டும். குறைந்த பட்சம் இடையூறாவது செய்யாமல் இருக்க வேண்டும்  
சொல்லப்படுகிற நகைச்சுவைக்கு தொடர்பாக ஒன்று இருந்தால் அதைச் சொல்லலாம். அல்லது அதன் சுவையைக் கூட்டும்படி ஏதாவது சொல்லாம் . ஆனால் இவர்கள் இருவரும் வருபவர்களை டிஸ்கரேஜ் செய்வதாகத்தான் தெரிகிறது. அவர்களைத் துறத்தும் அளவுக்குக் கூட போகிறார்கள்.  அந்த அதிகாரத்தை இவர்களுக்கு யார் கொடுத்தது என்று தெரியவில்லை.
போகிற போக்கைப் பார்த்தால் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வருபவர்களை வரவிடாமல் செய்து விடுவார்கள் போலிருக்கிறது. (வரும் ஆண்கள் பாடு பரவாயில்லை அவர்களை அதிகம் கலாய்ப்பதில்லை)


மதுரைமுத்துவுக்கும் ஆதவனுக்கும் சொல்லப்படுகிற ஜோக் தெரிந்துவிட்டால் அதை சொல்லி முடிக்க முடியாமல் பண்ணிவிடுவார்கள். இவர்களுக்கு தெரிந்தால் பார்க்கும் ரசிகர்களுக்கும் தெரிந்திருக்கும் என்று சொல்ல முடியுமா. இனியாவது வருபவர்களுக்கு உதவியாக இருந்து நிகழ்ச்சியை நடத்தினால் நன்றாக இருக்கும் செய்வார்களா?

2 கருத்துகள்:

  1. true
    yhis aadhavan will never allow the participant to complete their action/dialogue
    aadhhavan creates an INTERFERENCE and drives away the participant...
    aadhavan arrogant...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி. மிகச்சரியாக சொல்லி இருக்கிறீர்கள். உங்கள் வருகைக்கும் கருத்துப் பதிவிற்கும் நன்றி

      நீக்கு

தங்கள் மேலான கருத்துக்களை தெரிவிக்கவும்.