செவ்வாய், 9 ஆகஸ்ட், 2016

தொடரை மெகா தொடர் ஆக்குவதற்காக இப்படியா செய்வது?

சன் தொலைக்காட்சியில் பகல்நேரத்தில் ஒளிபரப்பாகி வரும் தொடர் பொன்னூஞ்சல்.  இதன் கதாநாயகன் கதாநாயகி இருவரையம் ஓரம்கட்டிவிட்டு (அவர்களுக்கு விடுப்பு கொடுத்து அனுப்பிவிட்டார்கள் போலிருக்கிறது) இடையில் வந்த பிரியாவை சுற்றி கதையை நகர்த்திக் கொண்டிருக்கிறார்கள். இத்தொடரை மெகாதொடர் ஆக்குவதற்காக இப்படியா ரசிகர்களை முட்டாளாக்குவது.
நந்தினி கதையைமுடித்துவிட்டு பிரியா கதையை தனிக்கதையாக புதிய தொடராக ஏன் மாற்றக் கூடாது? தொடர் ஆரம்பத்தில் மட்டும் நந்தினியின் படத்தையும் காட்டிவிட்டால் போதும் என்று தொடர் தயாரிப்பாளர்கள் நினைக்கிறார்கள் போல் இருக்கிறது. மெயின் கதைக்குத் தொடர்புள்ளதாக புதிய பாத்திரங்களை உருவாக்குவதில் தவறு இல்லை. அவர்களைச் சுற்றியுள்ள கதையை விரிவாக்க காட்டுவதிலும் தவறு இல்லை. அதற்காக முக்கிய பாத்திரங்களை முழுவதுமாக விட்டுவிட்டு புதிய பாத்திரங்களின் கதையை மட்டும் நகர்த்துவது சரியாகத் தெரியவில்லையே

பிரியாவை இரண்டு பேர் திருமணம் செய்து கொள்ள போட்டி போட்டுக் கொண்டு நான்தான் பிரியாவைக் கல்யாணம் செய்யப்போகிறேன் என்று சொல்லிக்கொண்டு எல்லாவற்றையும் செய்வதாக கதையை அமைத்திருந்தார்கள். இப் போது ரம்யாவை திருமணம் செய்து கொள்ள இரண்டு பேர் போட்டி போடுவதாகக் கதையை அமைத்திருக்கிறார்கள். மொத்தத்தில் கதைக்குப் பஞ்சம் இருக்கிறது என்பது நன்கு தெரிகிறது. அதற்காக இப்படி ஒரே கதையில் முன்பு நடந்தமாதிரியே மறுபடியும் நடப்பது போல் காட்ட வேண்டுமா? தொடர் பார்க்கும் ஆசையை போக்கிவிடுவார்கள் போலிருக்கிறது. 





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தங்கள் மேலான கருத்துக்களை தெரிவிக்கவும்.