வெள்ளி, 18 மார்ச், 2016

எல்லா காதலர்களும் திருமணத்திற்கு முன்னதாக எல்லை மீறி பழகுவதாகக் காண்பிப்பது முறையா?







கேளடி கண்மணி தொடரில் பிரியங்காவின் காதலன் திருமணத்திற்கு முன்னதாகவே பிரியங்காவைக் கெடுத்துவிட அவள் கர்ப்பமடைந்து விடுகிறாள்.. குலதெய்வம் தொடரில் திருமணத்திற்கு முன்னதாகவே ரோஹித்தின் காதலி கர்ப்பமாகி விட அதைக் கலைக்க அவளைத் துறத்துகிறார்களாம். தெய்வமகள் தொடரில் சத்தீஸின் காதலி கர்ப்பமாகி விட அந்த கர்ப்பத்தைக் கலைக்க பிரகாஷ் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதாக  வருகிறது.

வம்சம் தொடரில் அருக்காணியை டாக்டர் கெடுத்துவிட அவள் கர்ப்பமாகி அதைக் கலைக்க மருத்துவ மளைக்குப் போகிறாளாம் வழியில் ஒரு ஏழைப்பெண்ணின் கதையைக்கேட்டு அருக்காணி தன் குழந்தையைப் பெற்றெடுத்து வளர்க்கப் போகிறேன் என்று முடிவெடுக்கிறாளாம்.
பிரியமானவள் தொடரில் டிஜிபியின் மகளைக் காதலன் கெடுத்துவிட அவள் தற்கொலை செய்து கொள்கிறாளாம்.
ஆதிரா தொடரில் நீலவேணியின் தோழி திருமணத்திற்கு முன்னதாகவே கர்ப்பமாகி விடுகிறாள். ஆனால் அவளது காதலனத் திருமணத்திற்கு முன்பே கொன்றுவிடுகிறார்கள்.,
சமீபத்தில் முடிந்த அழகி தொடரும் இதே பாணியில் மாரியின் தங்கை அவளது காதலனால் கெடுக்கப் பட்டு கர்ப்பமாகி விடுகிறாள் என்று கதை போனது.
இரவு நேரத்தொடர்கள் தான் இப்படி என்று பார்த்தால் பகல் நேரத்தொடர்களும் இதே போக்கில் தான் உள்ளன. மரகதவீணையில் இன்ஸ்பெக்டர் கவிதா சரசுவின் கணவருடன் பழகி மணமாகமலே கர்ப்பமாகி விடுகிறாள்
பொன்னூஞ்சல் தொடரில் விஸ்வாவுடன் பழகிய அகிலா கல்யாணத்திற்கு முன்னதாகவே கர்ப்பமாகி விடுகிறாளாம் விஸ்வாவிற்கு நந்தினி என்ற மனைவியும் இருக்கிறாள்.
தாமரை தொடரில் டாக்டரின் தங்கை ராஜிக்கு திருமணம் ஆகவில்லை ஆனால் அவளுடைய மகள் என்று ஒரு பெண் வந்து நிற்கிறாள். ராஜியின் முன்னாள் காதலன் இந்தப் பெண் ராஜியின் மகள்தான் என்பதற்கு ஆதாரம் இருக்கிறது என்று சொல்கிறான்.
சந்திரலேகாவிலும் விகனேஷ் நந்தினியைக்கெடுத்து அவள் கர்ப்பமாகிவிட அவளைத் திருமணம் செய்துகொள்வதாக சொல்லி அவளைக் கொன்று விடுகிறான்.

இப்படி கிட்டத்தட்ட எல்லா தொடர்களிலும் திருமணத்திற்கு முன்னதாகவே கர்ப்பமாகி விடுவதாகக் காண்பிப்பது சரிதானா? தொடர் தயாரிப்பாளர்களும் இயக்குனர்களும் இதைத்தான் மக்களுக்கு எடுத்துச் சொல்ல விரும்பு கிறார்களா? இதை எல்லாம் பார்த்துக் கொண்டு இவற்றிற்கும் எங்களுக்கும் சம்பந்தமே இல்லை என்று தொலைக்காட்சி நிறுவனத்தார் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது நியாயம்தானா?

6 கருத்துகள்:

  1. தங்கள் வருகைக்கும் கருத்துப் பதிவிற்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  2. என்னது "கெடுக்கப் படுவதா?!"

    எப்படி இந்த காலத்துலயும் இந்த மாதிரி உங்களால எழுத முடியுது?

    கோவிச்சுக்க வேண்டாம்... it's really disgusting

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த தொடர்களில் வருபவற்றையே குறிப்பிட்டுள்ளேன். நீங்கள் குறிப்பிட்டுள்ளதைப் போல இவற்றைப் பார்த்தால் அந்நிகழ்வு ஒரு பிர்ச்சினையே இல்லை என்று அத்தொடரில் வரும் பாத்திரங்கள் பார்த்தால் அங்கு கதையே இல்லையே!
      எல்லா காதலர்களும் இப்படித்தான் நெருக்கமாகப் பழகுகிறார்கள் என்று சித்தரிப்பது சரியா?
      உங்கள் வருகைக்கும் கருத்துப் பதிவிற்கும் நன்றி

      நீக்கு
  3. உங்கள் கேழ்வி நியாயமானதே. இதே கேழ்வி என்மனதிலும்
    தோன்றியதே.கலாச்சாரச் சீரழிவு இன அழிவின் ஆரம்பமே.
    நாகரீகம் என்ற போர்வையில் நடைபெறுகிறது இச்சீர் அழிவு
    மேற்குலகை அப்படியே பின்பற்றுவது வெட்கக்கேடனது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதைப் பற்றியெல்லாம் தொலைக்காட்சியினருக்கு கவலை இருப்பதாகத் தெரியவில்லையே! தங்கள் வருகைக்கும் கருத்துப் பதிவிற்கும் நன்றி.

      நீக்கு

தங்கள் மேலான கருத்துக்களை தெரிவிக்கவும்.