செவ்வாய், 23 ஜூன், 2015

தொடர்களையும் விட்டுவைக்காத பேய்கள்சன் தொலைகாட்lசியில் ஒளிபரப்பாகும் பாசமலர்ககள் தொடரில் முக்கிய வில்லி கார்விபத்தில் இறந்து விடுகிறார்.  அவர் ஆவியாக மல்லிகாவின் உடலில் புகுந்துகொண்டு தாமரை குடும்பத்தையே ஆட்டிவைக்கிறாராம். வம்சம் தொடரில் பூமிகா இறந்துவிட்டதாகவும்  அவர் ஆவியாக வந்து மதனையும், அவருடைய தாய் வசந்தாவையும் பயமுறுத்துகிறாராம்.  ஆதிரா தொடரில் இறந்து போன ஒரு பெண் பேயாகவந்து ஆதிராவுக்கு  உதவுகிறாராம். இப்படி கதைக்கு சம்பந்தம் இருக்கிறதோ இல்லையோ தொடர்களில் பேயைக் கொண்டுவந்துவிட்டார்கள்.
திரைப்படங்களில் பேய்க்கதைகள் வந்து கொண்டிருப்பதன் தாக்கம் சின்னத்திரையையும் விட்டுவைக்க  வில்லை போல தெரிகிறது. அது சரி வம்சத்தில் வரும் பூமிகாதான் சாகவில்லை உயிரோடு இருக்கிறார் என்றால் அவர் பேயாக எப்படி வந்திருக்க முடியும். இவை எல்லாம் கதைதான் என்பதற்காக ஒரேயடியாக பார்ப்பவர்களின் காதுகளில் பூ சுற்றுவதா?

நல்ல நிகழ்ச்சிகளான அமுதமொழிகள், மற்றும் இந்த நாள் இனியநாள் போன்ற நிகழ்ச்சிகளை நிறுத்தியே தீருவோம் என்று சன் தொலைக் காட்சியினர் நிறுத்திவிட்டார்கள்.  ஆனால் ஞாயிற்றுக்கிழமைகளில் அவர்கள் காண்பிக்கும் அன்றையதினம் ஒளிபரப்பாகவிருக்கும் நிகழ்ச்சிப்பட்டியலில்  அவை இன்னமும் இடம்பெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன. கீழேயுள்ள படத்தைப் பாருங்கள்.   அவற்றை திரும்பவும் ஒளிபரப்பும் எண்ணம் அவர்களுக்கு இருக்கிறதோ என்று எண்ணத்தோன்றுகிறது.

வம்சம் தொடரில் ரோஜா இறந்து விட்டதாகக்கூறி முத்துவுக்கு கல்யாணம், பிரியமனவளேயில் அவந்திகா நடராஜ்கல்யாணம், வாணி ராணி தொடரில் ராணி வீட்டு ஓனரின் மகளுக்கு குலதெய்வம் கோவிலில் திருமணம், ஆதிரா தொடரில் ஆதிராவுக்கு காட்டுக்குள் திடீர் கல்யாணம், அழகியில் கோவிலில் திருமணம் என பெரும்பாலான தொடர்களில் கல்யாண காட்சிகளாக வருகின்றனவே  இது என்ன தொடர்களின் திருமண வாரமா ?

2 கருத்துகள்:

  1. ஒளிபரப்பும் எண்ணம் எல்லாம் இல்லை... அந்த தகவலை எடுக்க தவறி இருக்கலாம் ஐயா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சன் தொலைக்காட்சி போன்ற பெரிய நிறுவனம் இரண்டு மூன்று மாதங்களாக இது போன்ற சிறிய தவறுகளைச் செய்ய மாட்டார்கள் என்ற அடிப்படையில் இது போல எழுதினேன். ( அப்படித்தான் இருக்கும்.) கருத்துப் பதிவிற்கு நன்றி

      நீக்கு

தங்கள் மேலான கருத்துக்களை தெரிவிக்கவும்.