சனி, 15 நவம்பர், 2014

நாய் வாலை நிமிர்த்த முடியுமா?

சன் தொலைக் காட்சியின் அமுத மொழிகள் நிகழ்ச்சியில் சாலமன் பாப்பையா அவர்கள் கம்பன் கவிதைகள், விவேக சிந்தாமணி அறப்பளீஸ்வரர் சதகம் பாடல்களில் ஒன்றை எடுத்துக்கொண்டு அதற்கு அருமையாகவிளக்கம் சொல்லி வந்தார். அதேபோல இந்த நாள் இனிய நாள் பகுதியில் சுகிசிவம் அவர்களும் அரிய தகவல்களைக் கூறிவந்தார். இந்நிகழ்ச்சிகளில் ஒளிபரப்பிய பகுதிகளையே திரும்பத் திரும்ப ஒளிபரப்பி வருகிறார்கள்.
.(நாய்வாலை வெட்டி சீவினாலும் எ.ழுத்தாணியாகாது, சுடுகாட்டைக் கூட்டிப் பெருக்கி சுத்தம் செய்தாலும் சுடுகாடு வீடாகாது தாய் சொல் கேட்காத மகன் தானும் மற்றவர்களுக்கு ஏதும் செய்ய மாட்டான் ம்ற்றவர்களையும் செய்ய விடமாட்டான் என்ற விவேக சிந்நாமணியின் பாடலுக்கு சாலமன் பாப்பையா சொன்ன விளக்கத்தையும், தமிழ்ப் பேச்சாளர்களான நமச்சிவாயம், சோ.சத்தியசீலன், அறிவொளி போன்றவர்களைக் கவுரவிக்க திருச்சியில் விழா எடுத்து பொற்கிழி கொடுத்த செய்தியை சுகி சிவம் அவர்கள் பெருமைபட எடுத்துக் கூறியதையும் பலமுறை ஒளிபரப்பி இருந்தாலும் அவற்றையே திரும்பவும் மீண்டும் ஒளிபரப்பினார்கள்.) இப்படி டீவி பார்ப்பவர்கள் நேரத்தை வீணாக்கலாமா?  நாய் வால் நிச்சயமாக எழுத்தாணி ஆகாது, சன் டீவியும் திருந்தாது.

மதியம் 2.00 மணிக்கு ஒளிபரப்பப் பட்டு வந்த தலைப்புச் செய்திகள், 

சீரியலுக்காக 2.30 மணிக்கு மாற்றப்பட்டது.. இப்போது இன்னொரு சீரியல் 

(சந்திரலேகா) தொடங்கப்பட்ட போது அந்த தலைப்புச் செய்திகளே கைவிடப் 

பட்டு விட்டது.  


இதே போல காலை நேரத்தில் ஒளிபரப்பாகும் சூரிய வணக்கம் நிகழ்ச்சி திங்கட்கிழமை முதல் சனிக்கிழமை வரை ஒளிபரப்பப் பட்டு வந்தது. சனிக்கிழமைகளில் இந்த நிகழ்ச்சியின் நேரம் கொஞ்சம் கொஞ்சமாக குறைக்கப்பட்டு இப்போது காலை 7.00 மணியோடு நிறுத்தப் பட்டு 7.00 மணி நேரத்தை விளம்பரதாரர் நிகழ்ச்சிக்கு (தெய்வ தரிசனம்) ஒதுக்கி விட்டார்கள்.. ;நாங்கள் ஒளிபரப்புவதுதான் நிகழ்ச்சி டீவி ரசிகர்கள் அவற்றை பார்த்துத் தான் ஆகவேண்டும் என்ற சன் தொலைக் காட்சியினரின் மனநிலை மாறுமா?   

2 கருத்துகள்:

தங்கள் மேலான கருத்துக்களை தெரிவிக்கவும்.