ஞாயிறு, 14 செப்டம்பர், 2014

முடியாதது என்று ஏதும் இல்லை

முடியாதது என்று ஏதும் இல்லை
(Nothing is impossible)
கீழே போகமுடியவில்லையென்றால், மேலே செல்லுங்கள்
உள்ளே புகுந்து செல்லமுடியவில்லையென்றால், சுற்றிக்கொண்டு செல்லுங்கள்
வலதுபுறம் போகமுடியவில்லையென்றால், இடதுபுறம் செல்லுங்கள்,
L வடிவ இரும்பு கிடைக்கவில்லையென்றால், L வடிவம் செய்யுங்கள்,
சரியான பொருள் கிடைக்கவில்லையென்றால், தேடி வாங்குங்கள்,
எவ்வளவு தேடியும் கிடைக்கவில்லையென்றால், மாற்று கண்டுபிடியுங்கள்,
மாற்றுப் பொருளும் கிடைக்கவில்லையென்றால், இருப்பதில் மாற்றங்கள் செய்யுங்கள்,
இருப்பதில் மாற்றங்கள்  செய்ய முடியவில்லையென்றால், புதிதாகக் கண்டுபிடியுங்கள்,,
ஆனால் எல்லாவற்றிற்கும் மேலாக, அவ்வேலையைச் செய்துமுடியுங்கள்,..  
W.R. Greshamஅன்பை கெட்டிப் படுத்தடும்,
இரவை நீட்டித்து அதிகமாக்கும்,
சம்பளப் பையைக் காலியாக்கும்,
இருக்கும் இடத்தைக் குப்பையாக்கும்
வீட்டை சந்தோஷமாக்கும்,
ஆடைகளை அழுக்காக்கும்,
கடந்த காலத்தை மறக்கச் செய்யும்,
எதிர்கால வாழ்வைத் தகுதியுள்ளதாக்கும்,
அதுதான் குழந்தை

n  படித்ததில் பிடித்தது
வெற்றிக்கான விதிகள்;
சூழ்நிலைகளுக்குத் தகுந்தாற் போல உங்களை மாற்றிக் கொள்ளுங்கள் ஆனால் உங்கள் குணாதியங்களையும், எதற்காக அங்கு இருக்கிறீர்களோ அந்தக் காரணத்தையும் விட்டு விடாதீர்கள்.
ஒளிவு மறைவு இல்லாமல் இருங்கள் ஆனால் முகத்தில் அடித்தமாதிரி பேசாதீர்கள்
தைர்யத்தோடு இருங்கள், ஆனால் ஆபத்தை உணர்ந்து செயல்படுங்கள்
கடினமாக உழைக்கத் தவாறாதீர்கள், ஆனால் தொடர்ந்து உழையுங்கள் திடீர் தீடீரென சில நேரங்களில் மட்டும் கடினமாக உழைப்பதில் பலன் இருக்காது
ஏதாவது ஒரு விஷயத்தையாவது நன்கு தெரிந்து கொண்டு அதில் திறமைசாலியாக ஆகுங்கள். ஆனால் மற்ற துறைகளை ஒதுக்கி உங்களை சுருக்கிக் கொள்ளாதீர்கள்.
எழுத்திலும் பேச்சிலும் உங்கள் கருத்துக்களை சரியாக வலியுறுத்துகின்ற திறமையை வளர்த்துக் கொள்ளுங்கள், ஆனால் அதையும் நாசுக்காக சொல்லத்தவறாதீர்கள் (முகத்தில் அடித்தது போல பேசாதீர்கள்)
அடிப்படை விஷயங்களை விரிவான விவரங்களிலிருந்து பிரித்துக் கொண்டு செய்ய வேண்டிய செயல்களை சுருக்கமாகக் குறித்துக் கொள்ளுங்கள். ஆனால் தேவையான விவரங்களை ஒதுக்கி விடாதீர்கள்.
மனித இனத்தின் மீது நம்பிக்கை வையுங்கள், தன்னம்பிக்கையோடு செயல் படுங்கள்.  ஆனால் மற்றவர்களின் செயல் பாடுகளை அவ்வப்போது சரிபார்க்கத் தவறாதீர்கள்.. 

4 கருத்துகள்:

 1. தன்னம்பிக்கை வளர்க்கும் அருமையான வரிகள்.பாராட்டுக்கள்.!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உங்கள் வருகைக்கும் கருத்தைப் பதிவு செய்தமைக்கும் நன்றி

   நீக்கு
 2. விவாதக்கலை வலைப்பூவில் தங்களின் கருத்தை அன்புடன் தெரிவிக்கவும்
  http://vivadhakalai.blogspot.com/

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உங்கள் வருகைக்கும் கருத்துப் பதிவிற்கும் நன்றி

   நீக்கு

தங்கள் மேலான கருத்துக்களை தெரிவிக்கவும்.