திங்கள், 13 ஜனவரி, 2014

சின்னத்திரையையும் விட்டு வைக்காத சென்டிமெண்ட்

இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்




விளம்பர இடைவேளை இல்லாமல் ஒரு சீரியல் தொடர்ந்து ஒளிபரப்பப்படும்  என்ற அறிவிப்போடு நாதஸ்வரம் நெடுந்தொடர் அடிக்கடி ஒளிபரப்பப்படுகிறது. ரசிகர்களுக்கு ஏதோ பெரிய நண்மை செய்துவிட்டது போல ஒரு தோற்றத்தை ஏற்படுத்துகிறார்கள். விளம்பர இடைவேளை இல்லை என்றால் எல்லா விளம்பரங்களையும் சேர்த்து அத்தொடரின் ஆரம்பத்திலோ அல்லது முடிவிலோ காண்பிக்கப் போகிறார்கள் என்றுதானே அர்த்தம். உண்மையில் அப்படி விளம்பரம் இல்லாமல் தொடர் ஒளிபரப்பப்படும் ஒரு நிலை வந்தால் சந்தோஷம்தான். பண்டிகை காலங்களில் சிறப்பு நிகழ்ச்சிகளின் விவரங்களை (விளம்பரதாரர்களின் பெயர்களையும் சேர்த்து)  ஒளிபரப்பி அந்த விளம்பர நேரத்தைக் கூட்டாமல் இருந்தால் போதாதா

ரிஷிமூலம் என்ற நிகழ்ச்சியில் ‘’திரையுலகின் பொற்காலம் அன்றா இன்றா’’  என்ற நிகழ்ச்சி புதுயுகம் தொலைக் காட்சியில் புத்தாண்டுஅன்றும் தொடர்ந்தது. கன்னட நடிகர் அம்ரீஷ்,, தெலுங்கு நடிகர் ராஜசேகர், மலையாள நடிகர் ஜெயராமன், உலகநாயகன் கமல்ஹாசன் என பல பிரபல நடிகர்களையும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவர்களிடமும் கருத்துக்கேட்டது நிகழ்ச்சிக்கு சுவை கூட்டியது. ‘’பொற்காலம் அன்றா இன்றா’’ என்று பதில் சொல்லாது வருங்காலம்தான் பொற்காலம் என்று சொல்லி முடித்தார். நிகழ்ச்சியின் இடையே விளம்பர இடைவேளை என்று நேரம் ஒதுக்கினாலும் அவர்களது டீவியின் நிகழ்ச்சி பற்றிய ஒரேஒரு அறிவிப்போடு நிகழ்ச்சி தொடர்ந்தது ஒரு ஆறுதல். இவர்களுக்கும் விளம்பரம் வரும் வரை விளம்பர தொந்தரவு இல்லாமல் நிகழ்ச்சிகளைப் பார்க்கலாம்.
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டுவந்த தேன்நிலவு தொடர் முடிவுக்கு வந்தது. எல்லா கதைகளிலும் வில்லன், வில்லி திருந்தி நல்லவர்களாக ஆகவேண்டும் என்ற விதிகளின்படி அகல்யாவும், வில்லனும் திருந்திவிடுவதாகக் காண்பிக்கிறார்கள். எல்லோரையும் விடுபட்டுப்போன தேனிலவைக் கொண்டாட எல்லோரையும் கொடைக்கானலுக்கு அவர் செலவிலேயே அழைத்துச் செல்கிறேன் என்று டெல்லிகணேஷ் சொல்கிறாராம்.  இனியாவது அவரவர் குடும்பத்தோடு தனியாக சென்று குழப்பமில்லாமல் தேனிலவு கொண்டாடி வரட்டும்.

தேனிலவைத் தயாரித்த திருபிக்சர்ஸ் அடுத்ததாக மாதம் ஒரு கதையாக ஒளிபரப்பப் போகிறார்களாம்.  இதையாவது ஜவ்வு போல இழுக்காமல் திரைக்கதை அமைப்பார்கள் என்று எதிர்பார்ப்போம்.   திருமுருகனுக்கு மெட்டி ஒலியில் நடனமாடிய சாந்தி தலைப்புப் பாடலுக்கு நடனம் ஆடினால்தான் தொடர் வெற்றி பெரும் என்ற சென்டிமென்ட் போலிருக்கிறது.தேனிலவிலும் அவரையே நடனமாட வைத்திருந்தார் இதிலும் கதை ஒண்ணு சொல்லப் போறோம் என்ற பாடலுக்கு அவரையே நடனமாட வைத்திருக்கிறார். சில நாட்களே ஒளிபரப்பாகப் போகும் தலைப்புப் பாடலில் என்ன இருக்கிறது திரைக்கதையும் காட்சிகளும் நன்றாக இருப்பதுதானே ரசிகர்களுக்கு முக்கியம் .
 


திருச்சியில் சிறந்த பேச்சாளர்களான திரு நமச்சிவாயம், திரு சொ . சத்தியசீல\ன், திரு. அறிவொளி போன்றவர்களுக்கு பாராட்டுக்கூட்டம் நடைபெற்றதாகவும், அவர்களுக்கு பொற்கிழி பரிசாகக் கொடுக்கப் பட்டதாகவும் திரு சுகி சிவம் அவர்கள் இந்த நாள் இனிய நாள் நிகழ்ச்சியில் கூறினார். பாராளுமன்ற மேல்சபை உறுப்பினர் திருச்சி சிவா அவர்கள்தான் பொற்கிழியை வழங்கினாராம். இவரது கை மேலேயும் அவர்களது கைகள் கீழேயும் இருக்கக் கூடாது என எண்ணி பரிசைத் தன் கைகளில் வைத்துக் கொண்டு அறிஞர் பெருமக்களை எடுத்துக் கொள்ளச் சொன்னாராம்.-  இவர்கள் அனைவரும் பாராட்டப்பட வேண்டியவர்கள். பாராட்டியவர்களுக்கு நன்றி.

4 கருத்துகள்:

  1. பாராட்டப்பட வேண்டியவர்கள் ..//

    பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள்..

    இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்..!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இராஜராஜேஸ்வரி12 January 2014 22:48
      பாராட்டப்பட வேண்டியவர்கள் ..// பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள்..
      இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.

      தங்கள் வருகைக்கும் பாராட்டுக்களுக்கும் நன்றி. பொங்கல் வாழ்த்திற்கும் நன்றி. உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் பொங்கல் நல் வாழ்த்துக்கள்.

      நீக்கு
  2. பல தகவல்களுக்கு நன்றி ஐயா...

    தித்திக்கும் இனிய தைப் பொங்கல் + உழவர் திருநாள் நல்வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் வருகைக்கும் கருத்துப் பதிவிற்கும் நன்றி. பொங்கல் மற்றும் உழவர் திருநாள் வாழ்த்துக்களுக்கும் நன்றி. உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இதயங்கனிந்த பொங்கல் நல் வாழ்த்துக்கள்.

      நீக்கு

தங்கள் மேலான கருத்துக்களை தெரிவிக்கவும்.