புதன், 11 செப்டம்பர், 2013

இறந்து போன கதாநயாயகியின் தாயும் உயிரோடிருக்கிறாராம்





·       நெடுந்தொடர்களில் கதாநாயகன் அல்லது கதாநாயகியையே இறந்ததாகக் காட்டுகிறார்களே இதை எப்படி நம்புவது? என்று கேட்டு எழுதியிருந்தேன்.   உதிரிப்பூக்கள் தொடரில் கதாநாயகி சக்தி பாண்டிச்சேரியில் உயிரோடு இருப்பதாகவும் இது அவர்கள் வீட்டிலுள்ளவர்களுக்கு தெரியாது என்றும் கதையை நகர்த்திக் கொண்டிருந்தார்கள். இப்போதோ திடீரென்று இதற்கும் முன்பே இறந்து போனதாகக் காட்டிய சக்தியின் அம்மா உயிரோடு இருப்பதாகவும் சக்தி தன் அம்மாவைப் சந்திப்பது போலவம் காட்டுகிறார்கள்.  கதாநாயகனோ கதாநாயகியோ அல்லது முக்கிய பாத்திரமோ இறந்து போனால் கதை சீக்கிரமே முடிந்து போய்விடுமே!  அப்புறம் அது நெடுந்தொடர் ஆகாதே! எனவே இவர்களை இறந்து போக விடமாட்டார்கள் என்று டீவி பார்ப்பவர்களுக்குத் தெரியாதா? ஏன் இப்படி இறந்து போனதாகக் காண்பிப்பதும் பின்னர் உயிரோடு இருப்பதாக்க் காட்டுவதையும் தொடர் இயக்குனர்கள் எப்போதுதான் விடப்போகிறார்களோ?


·       .பிள்ளைநிலா தொடரில் நிலா போலிசுக்குத் தெரியாமல் மறைந்து வாழும் தன் தந்தையை மற்றவர்களுக்குத் தெரியாமல் தன் வீட்டில் ஒளிய வைத்துக் கொண்டிருப்பதாகவும் அதை மற்றவர்கள் யாருமே கண்டுபிடிக்கவில்லை என்றும் தொடர் பார்ப்பவர்கள் காதுகளில் பூச் சுற்றுகிறார்கள். சரி கதைதானே விட்டுவிடலாம் என்று பார்த்தால் இப்போதோ அவர் சமையலறைக்குப் போய் தானே தோசை சுட்டு, மற்றவற்றை செய்து  சாப்பிடுவதாக்க் காட்டுகிறார்கள். மறைந்திருக்கும் அவர் கதவை கொஞ்சம் திறந்து வீட்டிலுள்ளவர்களைப் பார்ப்பது போலவும் அவர்கள் இவரைப் பார்க்காதது போலவும் காட்டுகிறார்கள். என்னதான் தீயசக்தி வீட்டில் நடமாடுவதாக வீட்டிலுள்ளவர்கள் பயந்து போய் இருப்பதாக சொன்னாலும் போலிஞுக்குப் பயந்து ஒளிந்து இருப்பவர் எந்த பயமும் இன்றி இப்படித்தான் நடந்து கொள்வாரா? 



·       மற்ற தொலைக்காட்சிகள் எல்லாம் விநாயக சதுர்த்திக்காக ஸ்பெசல் சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்திக் கொண்டிருக்க கலைஞர் டீவியில் மட்டும் ‘’விடுமுறைதின’’  சிறப்பு நிகழ்ச்சிகளை ஒளிபர்ப்பிக் கொண்டிருந்தார்கள்.  இவர்களுக்கு விநாயக சதுர்த்தியில  நம்கிக்கை இல்லையென்றால் அது தவறில்லை. சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தாமல் விட்டுவிட வேண்டியதுதானே. (வருமாணத்தை விட்டுவிடக்கூடாது என்பதால்தானே சிறப்பு நிகழ்ச்சிகளை ஒளிபரப்புகிறார்கள்) விநாயகர்தினத்தன்று ஒளிபரப்பப்பட்டவை விடுமுறைதின சிறப்பு நிகழ்ச்சிகள் என்றால் மற்ற விடுமுறை நாட்களிலும் இப்படி சிறப்பு நிகழ்ச்சிகளை ஒளிபர்ப்புவார்களா? 

4 கருத்துகள்:

  1. நல்ல கேள்வி...?

    இதெல்லாம் பார்க்க நேரம் இருப்பதற்கு வாழ்த்துக்கள்... நன்றிகள்...

    பதிலளிநீக்கு
  2. திண்டுக்கல் தனபாலன்11 September 2013 01:16
    நல்ல கேள்வி...?

    தங்கள் வருகைக்கும் கருத்துப் பதிவிற்கும் நன்றி.
    (இவற்றைப் பார்ப்பதற்கென்று நேரம் ஒதுக்குவதில்லை. தனியாக இருக்கும் பொழுது டீ வி ஓடிக்கொண்டிருக்கும் அவ்வப்பொழுது பார்ப்பதுதான்) வாழ்த்துக்களுக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  3. ஹா..ஹா..ஹா.. நல்ல நல்ல கேள்விகள்:) ஆனா எனக்குப் பதில் சொல்லத் தெரியல்ல:).

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்படிப்பட்ட விஷயங்கள்தான் ஒரு தொடரை நெடுந்தொடர் ஆக்குகின்றன். தங்கள் கருத்துப் பதிவிற்கு நன்றி

      நீக்கு

தங்கள் மேலான கருத்துக்களை தெரிவிக்கவும்.