Ø உதிரிப்பூக்கள்
தொலைக்கட்சித் தொடரில் இறந்ததாகக் காட்டப்பட்ட கதாநாயகியும், கதாநாயகியின்
அம்மாவும் இறக்கவில்லை உயிரோடுதான் இருக்கிறார்கள் என்று கதையை நகர்த்துகிறார்கள்
என்று பார்த்தால் இதற்கு போட்டியாக முந்தானை முடிச்சு தொடரில் இறந்த- இல்லை இல்லை -
கொலை செய்யப்பட்ட சதீஷ் பாத்திரத்திற்கு திடீரென உயிர் கொடுத்திருக்கிறார்கள்.
இறந்த சதீஷ்னுடைய தம்பி அவனைப்போலவே
இருக்கிறான் இருவரும் இரட்டைப் பிறவி (ட்வின்ஸ்) என்றும் சதீஷினுடைய தம்பியை சதீஷ்
போல நடிக்க வைக்க திட்டமிடுகிறாளாம்
வில்லி பிரேமா. எப்படியோ இறந்தவர்களுக்கு உயிர் கொடுக்கும் பிரம்மாக்களாக மாறி
இருக்கிறார்கள் தொடர் இயக்குனர்கள். கதையை நீட்டிக்க எப்படியெல்லாம்
யோசிக்கிறார்கள் இவர்கள்.
Ø யாரிடமாவது அவர்கள் குடியிருக்கும் வீட்டைக் காலிசெய்யச் சொன்னால் ஒரு மாதமோ அல்லது இரண்டு மாதமோ டயம் தாருங்கள் வேறு வீடு பார்த்துக்கொண்டு போய்விடுகிறோம் என்றுதான் சொல்வார்கள்.. ஆனால் தொடர்களில் மட்டும் வேறு விதமாகத்தான் நடக்கும். யாரையும் குடும்பத்தோடு வெளியே போய்விடுங்கள் என்று சொன்னால் அவர்கள் எல்லோரும் (பெரியவர்கள் சிறியவர்கள் வித்தியாசமில்லாமல்) வீட்டைவிட்டு வெளியே போய் ரோட்டில் இறங்கி நடக்கத் தொடங்கிவிடுவார்கள்.. அடுத்த வேளைக்கு எங்கு போவோம் எப்படி இருப்போம் என்று எதையும் யோசிக்க மாட்டார்கள் (அவ்வளவு ரோசம் மானம் உள்ளவர்கள்.) யாரும் உதவ முன் வந்தாலும் அதை ஏற்கவும் அவர்களுக்கு தன்மானம் இடம் கொடுக்காது –- உதாரணம் தெய்வமகள் மற்றும் வாணி ராணி இரண்டு தொடர்களிலுமே அப்படித்தான் (அதுவும் ஒரே நேரத்தில் நடக்கும் நிகழ்வுகள்) கதையில் சுவாரஸயமும் கதாபாத்திரங்கள் மேல் அனுதாபமும் ஏற்பட வேண்டும் என்பதற்காக எதார்த்தத்தைப்பற்றி கொஞ்சமும் யோசிக்காமல் இப்படியா திரைக்கதை அமைப்பார்கள்?