செவ்வாய், 20 நவம்பர், 2012

ஒளிபரப்பியதையே திரும்பத் திரும்ப ஒளிபரப்புவதா?


சாலமன் பாப்பையா சன் தொலைக்காட்சியில் தினம் ஒரு திருக்குறளுக்கு விளக்கம் சொல்லியது ஓர் அரிய பணி என்பதை மறுக்க முடியாது. 

இப்போது சன் தொலைக்காட்சியில் சனி மற்றும் ஞாயிறுகளில் காலையில் திருக்குறள் கதைகள் ஒளிபரப்புகிறார்கள்.  ஆகா நல்ல விஷயமாச்சே என்று தொடர்ந்து பார்த்தால் அப்போதுதான் தெரிந்தது ஒளிபரப்பியதையே திரும்பத் திரும்ப ஒளிபரப்புகிறார்கள் என்று. ‘மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி..' திருக்குறளுக்குய உதாரணமாக கல்கத்தாவில் பிரபலமாயிருந்த தேசபந்து சித்தரஞ்சன்தாஸ் வாழ்க்கை பற்றிய விவரங்களைக் கூறினார் சாலமன் பாப்பையா. இதையே மூன்று வாரங்களாகவா ஒளிபரப்புவது!

மற்ற சேனல்கள்தான் இது போல ஒளிபரப்பியதையே ஒளிபரப்புகிறார்கள் என்று பார்த்தால் சன் டீவியுமா? அப்படி திரும்ப ஒளிபரப்பினால் ‘மறு ஒளிபரப்பு என்றாவது அறிவிக்கட்டும்.. இனியாவது தொலைக்காட்சி பார்ப்பவர்களை இப்படி மறுஒளிபரப்புச் செய்து ஏமாற்றாமல் இருப்பார்களா?

2 கருத்துகள்:

  1. தங்கள் அருமையான பதிவுகளை தமிழன் ( www.tamiln.org ) திரட்டியிலும் இணையுங்கள்.

    பதிலளிநீக்கு
  2. சு ராபின்சன் said...
    //தங்கள் அருமையான பதிவுகளை தமிழன் ( www.tamiln.org ) திரட்டியிலும் இணையுங்க//

    தங்கள் வருகைக்கும் பதிவிற்கும் ஆலோசனைக்கும் நன்றி

    பதிலளிநீக்கு

தங்கள் மேலான கருத்துக்களை தெரிவிக்கவும்.