அனைவருக்கும் தமிழ்ப் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்
.. புதுயுகம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘’மனம்
திரும்புதே’’ நிகழ்ச்சியில் நடிகை சொர்ணமால்யாவின் பேட்டி இடம்பெற்றது. இந்நிகழ்ச்சி
மிகவும் வித்தியாசமாக இருந்தது. பாரதியாரின் ‘எங்கிருந்தோ வந்தான் இடைச் சாதி நான்
என்றான்... ‘ என்ற பாடலை சொர்ணமால்யா தன் தோழிகளுடன் சேர்ந்து கர்நாடக இசையில்
பாடி அதன் வரிகளை ராப் பாடலாகவும் பாடி அசத்தினார். கேள்விகளுக்கு மிகவும் கேஷுவலாகப் பதில்
சொன்னதும் அருமை.